கார்த்திக் பாரதி
வைகை இலக்கியத்திருவிழாவில் எம்.பி பேசி முடித்து எழுத்தாளர் தேவதாஸ் பேசி முடிக்கும் வரை அரங்கம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது.
பேரா.முத்தையா பேச துவங்கும் போது தேநீர் வேளை துவங்கியது.அதற்கு பொறுப்பு எடுத்திருந்த பேராசிரியர்களும்,மாணவிகளும் அதை தவிர்த்திருக்க வாங்கினர்.என்ன உற்சாகம்.எங்கு பார்த்தாலும் சத்தமாக பேச்சு பேச்சு.
கருத்தாளர்கள் விடாது அடுத்தடுத்து பேசினர்.அவரவருக்கு இட்ட வேலைகளை அவரவர் செய்தனர்.
அடுத்து பிஸ்கட் தட்டு தேநீர் குறைகளை அகற்ற பணியாளர்கள் அத்தனை சிரத்தை. அம்மா,அய்யா,தம்பி என அழைத்து பணி செய்தனர்.
குளிர் சாதனத்தின் அளவை கூட்ட ஒரு பணியாளர் ரிமோட்டை மேல்நோக்கி ஒவ்வொரு ஏ.சியின் முன் நின்று அவரும் அவர் பணியை செவ்வனே செய்தார்.
எனக்கு என் உடல்நிலை பற்றி தெரியும் தானே.நான் என் தலைக்கு மேல் உள்ள ஏசியை குறைக்க சொல்லி இருக்கலாம்.நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பெரிய வம்பாகி போச்சு.ஏசி ஒத்துக்கொள்ளவில்லை.
காய்ச்சல் துவங்கிவிட்டது.
ச.தமிழ்ச்செல்வன்,பேரா அ.ராமசாமி,பேரா.தர்மராஜ் என காத்திருந்தது. வீணாக வில்லை. ஆடியன்ஸ்தான் உவப்பாக இல்லை.
பிள்ளைகளை குறை சொல்லி என்ன செய்ய?.
மேடையில் நெல்லைகண்ணன், பாரதிகிருஷ்ணன் இவர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
பேரா.தர்மராஜ் உரைக்கு
பிறகு கடும் காய்ச்சலோடு வீட்டிற்கு வந்து விட்டேன்.
இப்போ பரவாயில்லை.
இன்று காலை அத்தனை உரையாளர்களுமே தலைப்புக்கேற்ற நியாயம் செய்திருந்தனர்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் என்ன பேசவேண்டும்,எதை பேச வேண்டும்.எப்படி பேச வேண்டும்.எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு ஏற்ற மேன்மையான உரையாக பேரா.தர்மராஜ்.உரை இருந்தது.
உணவா?இலக்கியமா?
உணவு உணவு என என் கூக்குரல்கள் கேட்டது.
இருப்பினும் இலக்கியம் பேச துவங்கினார். அமைப்பாளர்களை மறுத்து ஏதேனும் செய்ய முடியுமா?வழக்காறுகளை வாசித்தல் என்ற தலைப்பபு. ஒரு கடின உரை. கொலப்பசி. கடும் காய்ச்சல். குளிர்.
பேரா.தர்மராஜ் அவர்களும்உற்சாகம்.அவர் உரையும் உற்சாகம். பேச்சின் வழியே ஒரு மகிழ்ச்சியை,இலக்கிய ரசனையை கடத்தினார்.ஆளும் இன்று வெகு ஸ்மார்ட்.
ரொம்ப எளிய விசயம் .புத்தகம் படிக்கனும்.படிக்கனும்.விவாதிக்கனும்,பேசுனும்.ஜனநாயக செயல்பாடுகள் வேனும். உண்மையில் நன்கு படிக்கும் கல்லூரி படிக்கும் மாணவனோ,மாணவியே இந்த உரையை கேட்டதும் துள்ளி குதித்திருப்பர்.
பசி நேரம் .எதற்கு ஏன் என்ற விபரம் இல்லாமல் உருத்து இல்லாமல் கூட்டப்படும் ஆடியன்ஸ்.என்ன செய்ய. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புதிதாக காண வரும் பிள்ளைகளுக்கு.பேரா.தர்மராஜ் அவர்களின் உரையை ஒரு முறை கேட்க வைக்கலாம்.
எளிய அழகிய ,தேவையான உரை.
வழக்கம் போல் அட்டகாசம் தர்மராஜ் சார். காய்ச்சலை தாண்டி உற்சாகம் தொற்றியிருந்தது.
Comments